Niroshini / 2015 செப்டெம்பர் 20 , பி.ப. 01:43 - 0 - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்
உள் நாட்டு விசாரணையில் எமது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். அவை ஒழுங்கானதும் நீதியானதுமாக இடம்பெறாது.எனவே நாம் சர்வதேச விசாரணையையே கோரி நிற்கின்றோம் என எதிர்க் கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
திருகோணமலை, குச்சவெளி பிரதேச பெண்கள் வலையமைப்பின் ஏற்பாட்டில் திரியாய் பாடசாலையில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற பிரச்சினை வெளிப்பாட்டுக் களத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
திருகோணமலையில் இடம்பெற்ற 5 மாணவர்களின் படுகொலை மற்றும் மூதூர் தன்னார்வ தொண்டர்கள் 17 பேர் கொலை போன்றவற்றுக்கு அமைக்கபட்ட விசேட ஆணைக்குழுவில் வெளிநாட்டு நிபுணர்கள் மற்றும் வெளிநாட்டு ஓய்வு பெற்ற நீதிபதிகள் செயற்பட்ட போதும் அவர்களால் இலங்கை அரசாங்கத்துடன் நீதியான விசாரணையை மேற் கொள்ள முடியாது என சில மாதங்களில் வெளியேறியுள்ளனர்.
இவ்வாறான அனுபவங்கள் மூலம் உள்நாட்டு விசாரணையில் எமது மக்கள் நம்பிக்கையிழுந்துள்ளனர். எனவே சர்வதேச விசாரணையையே நாம் கோருகின்றோம்.
நான் முதலில் திருகோணமலை மாவட்டத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் அதன் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் அவை இரண்டின் மூலமே எனக்கு எதிர்க் கட்சித் தலைவர் பதவி கிடைத்தது.
என்னுடைய 33 வருட நாடாளுமன்ற அனுபவத்தில் நான் எதிர்க்கட்சியில் உள்ளேன். எனவே இருக்கும் நாடாளுமன்ற பிரதிநிதிகளுடன் ஒப்பிடும் போது நீண்டகாலம் எதிர்க் கட்சியில் இருந்தமையால் நாம் இதற்கு பொருத்தமானவன் என எண்ணுகின்றேன்.
தமிழ் மக்களுக்கு நியாயமான அனைவராலும் ஏற்றுக் கொள்ளக் கூடிய ஏனைய நாடுகளில் வழங்கப்பட்டுள்ளவாறான நாகரிகமான தீர்வு ஒன்று கிடைக்கும் வரை நான் எதிர் கட்சியிலேயே இருப்பேன் என்றார்.
மேலும்,குச்சவெளி பிரதேச பெண்கள் வலையமைப்பால் குச்சவெளி பிரதேச மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளான யானை தொல்லை, மற்றும் சமுர்த்தி முத்திரை இல்லாமை, நிரந்தர வீடுகள் இல்லாமை, காணிகளுக்கான உறுதிப் பத்திரங்கள் இல்லாமை போன்ற பிரச்சினைகள் உள்ளடங்கிய மகஜர் ஒன்றும் எதிர்க் கட்சித் தலைவரிடம் கையளிக்கப்பட்டது.
இதற்கான நடவடிக்கைகளை தாம் துரிதமாக முன்னெடுப்பதுடன் குச்சவெளி பிரதேச மக்களுடைய பிரச்சினைகளை தீர்ப்பதற்கான ஒரு விசேட திட்டமிடலை நடத்தி நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் தான் திட்டமிட்டுள்ளதாகவும் மக்களிடம் எதிர்க் கட்சித் தலைவர் உறுதியளித்தார்.
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026
23 Mar 2026