Thipaan / 2016 ஜூன் 30 , மு.ப. 04:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொன் ஆனந்தம்
'சுடாதீங்க, சுடாதீங்க என கையெடுத்துக் கும்பிட்டோம் கத்தினோம், ஆனாலும் கேட்கவில்லை. எனது தந்தையையும் கணவரையும் ஆயுதங்களுடன் வந்தவர்கள் சுட்டுவிட்டார்கள்' என அநுராதபுரம் மேல்நீதிமன்றத்தில் 3 ஆம் நாளாகவும் நேற்றுப் புதன்கிழமை இடம்பெற்ற குமாரபுரம் படுகொலை விசாரணையில் சாட்சியமளித்த தங்கவேல் மருதாய் (வயது 70) தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்திருந்ததாவது,
எனது கணவரின் பெயர் அருணாசலம் தங்கவேல் அவர் சுடப்பட்டு இறக்கும்போது அவருக்கு வயது 50. சம்பவ திகம் மாலை 4.20 மணியளவில் நாங்கள் வீட்டில் தேநீர் அருந்திக் கொண்டிருந்தோம்.
அப்போது இராணுவத்தினர் சுட்டுக்கொண்டு வந்தனர். வந்தவர்கள் ஆமி உடையில் தான் வந்தனர். அவர்களில் பலரும் மதுபானம் அருந்தியிருந்தனர்.
எனது கணவரை சுட்டவர் கழுத்தில் பட்டியாக தோட்டாக்களை போட்டிருந்தார். அவர்கள், துப்பாக்கியால் சுடும்போது எனது கணவர் வந்து என்னைத் தள்ளி விட்டு மறித்தார் அப்போது தான்எனது கணவருக்கு வெடிபட்டது.
இவ்வாறு இந்த சம்பவத்தில் எனது தந்தையான கிட்டணண் கோவிந்தனும் சுடப்பட்டு கொல்லப்பட்டார்' என்றார்.
இவருடன் கணவதிப்பிள்ளை சிவநேசன் என்பவரும் சாட்சியமளித்தார் அவர் குறிப்பிடுகையில், 'எனது மாமாவின் பெயர் அரச ரெட்ணம். மாமாவுக்கு முதலில் சுட்டார்கள் அவர் காயமடைந்த நிலையில் நான் எனது நெஞ்சில் அவரைச்சாத்தி பிடித்து வைத்திருந்தேன் அதன் போதும் சுட்டார்கள்.
அப்போது எனது மாமி கிருபராணி தடுக்க வந்தார் அந்த நேரத்திலதான் மாமிக்கும் வெடிகாயம் பட்டது. இந்த சம்பவத்தில் எனது மாமாவுக்கும் மாமிக்கும் வெடிபட்டு காயம் ஏற்பட்டது' என்றார்.
இவ்விசாரணையில் இதுவரை ஐவர் சாட்சியமளித்துள்ளது, இன்று வியாழக்கிழமையும் விசாரணை இடம்பெறவுள்ளது.
17 Dec 2025
17 Dec 2025
17 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 Dec 2025
17 Dec 2025
17 Dec 2025