Suganthini Ratnam / 2015 ஒக்டோபர் 14 , மு.ப. 04:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வடமலை ராஜ்குமார்
சிறைகளில்; உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் இளைஞர்களின் விடுதலையை உடனடியாக அரசாங்கம் மேற்கொள்ள வேண்டுமென திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம் தெரிவித்தார்.
திருகோணமலையிலுள்ள அவரது இல்லத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு மேலும் தெரிவித்த அவர், '14 சிறைகளில் சுமார் 273 தமிழ் அரசியல்க் கைதிகள் வாடுகின்றனர். இவர்களில் சிலர் 14 வருடங்களுக்கும் மேலாக சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். தமிழ் இளைஞர்;கள் சிறைப்பட்டிருப்பது அரச நீதிக்கோ, இயற்கை நியதிக்கோ பொருந்தக்கூடிய செயல் அல்ல' என்றார்.
'இவர்கள் எந்தச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டிருந்தாலும், விசாரணை எதுவுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளமை பாரதூரமான மனித உரிமை மீறலாகும். எனவே, இவர்களின்; உண்ணாவிரதத்தை சாதகமான முறையில் அணுகி, அவர்களை விடுதலை செய்து, தமிழ் மக்களின் நம்பிக்கையை இந்த நல்லாட்சி அரசாங்கம் மேலும் வலுப்படுத்தவேண்டும்'எனவும் அவர் தெரிவித்தார்.
8 hours ago
8 hours ago
23 Mar 2026
23 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
23 Mar 2026
23 Mar 2026