Niroshini / 2015 டிசெம்பர் 23 , மு.ப. 03:59 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்
திருகோணமலை மாவட்டத்தில் சிறுபான்மை மக்களின் காணிகளை வன ஜீவராசிகள் திணைக்களம் கபளிகரம் செய்து தமது ஆதிக்கத்தை காட்டி வருவதாக கிழக்கு மாகாண சபையின் உறுப்பினரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான ஜே.எம்.லாஹிர் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண சபையின் வரவு- செலவுத் திட்டத்தின் இரண்டாம் நாள் வாசிப்பு மீதான விவாதம் செவ்வாயக்கிழமை(22) கிழக்கு மாகாண சபை தவிசாளர் சந்திரதாஸ கலபதி தலைமையில் நடைபெற்றது.இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில்,
கிழக்கு மாகாணத்தின் காணி அதிகாரத்தினை மத்திய அரசாங்கம் உத்தியோக பூர்வமாக தராத போதிலும் நாம் சும்மா இருந்து விட முடியாது.காணி விவகாரம் மாகாணத்தின் மிக விடயமாகும். கிழக்கு மாகாணத்தில் சிறுபான்மை மக்களின் காணிகள் சூரையாடப்படுவதாக தகவல் கிடைக்கின்றது. அது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
கிழக்கின் காணி அமைச்சுக்கான முத்திரை திட்டத்தை திருத்தியமைக்கப்பட வேண்டும். திருகோணமலை மாவட்டத்தில் நில அளவை அமைப்பு படத்தை மீளக்கப்பட்டு சிறந்த காணித் திட்டங்களை காணி அமைச்சு மேற்கொள்ள வேண்டும் என்றார்.
மேலும்,திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் மற்றும் தோப்பூர் போன்ற பகுதிகளில் வீதிகள் பல புனரமைக்கப்பாடத நிலையில் காணப்படுகின்றன.மூதூர் துரைமுக வீதி மற்றும் மூதூர் வேதத்தீவு பகுதிக்கான படகுச் சேவையை சீர்படுத்தப்பட வேண்டும். இதேவேளை, மத்ரஸா வீதி, மூதூர் நெய்தல் நகருக்கான வீதிகளையும் புனரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள்; நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
12 minute ago
21 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
21 minute ago
31 minute ago