2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

'சுற்று நிருபத்துக்கு முரணாக இடமாற்ற சபை அமைந்துள்ளது'

Niroshini   / 2015 ஒக்டோபர் 19 , மு.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்                          

2015/2016ஆண்டுக்கான இடமாற்ற சபை தொடர்பில் திருகோணமலை வலயத்தில் இம்முறை சரியாக பின்பற்றப்படவில்லை என  திருகோணமலை மாவட்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் பொன்.சந்திரேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

தங்களால் 29-01-2015 அனுப்பப்பட்ட 20 /01 /33 இலக்க சுற்று நிருபத்துக்கு முரணாக திருகோணமலை கல்வி வலயத்தில் இடமாற்ற சபை அமைவதை காணக்கூடியதாக உள்ளது.

உறுப்பினர்கள் தொடர்பில் தாபனக்கோவை (111)இன் அத்தியாயம் 3-5(அ)மற்றும் (ஆ)விதிகள் பின்பற்றப்படவில்லை. 

தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் என்பது தொழிற்சங்க ஆணையாளரினால் அனுமதி வழங்கப்பட்ட தொழிற்சங்கங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளையே சாரும்.

இவ்வாறு தொழிற்சங்க ஆணையாளரினால் அனுமதி வழங்கப்படாததும் தேவையான அங்கத்தவர்களை கொண்டிராத சங்க பிரதிநிதிகள் பங்குபற்றுவதும் கேலிக்கூத்தாகும்.         

எனவே, தாங்கள் மேற்படி விடயங்களை கருத்தில் கொண்டு வினை திறனான இடமாற்ற சபையை கொண்டு நடத்த வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .