Niroshini / 2015 டிசெம்பர் 06 , மு.ப. 08:05 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்
சின்னஞ்சிறார்கள் சிறுவயதில் கற்கின்ற கல்விதான் அவர்களின் உயர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் இட்டுச்செல்கின்றது.சிறுவயது கல்வியை வைத்து நாம் ஒருவரை இனங்கண்டு கொள்ள முடியும் என கிழக்கு மாகாண சபையின் உறுப்பினரும் சேருவில தொகுதியின் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதான அமைப்பாளருமான டொக்டர் அருண சிறிசேன தெரிவித்தார்.
கந்தளாய் பேராறு ஆயிஷா பாலர் பாடசாலையின் 2015ஆம் ஆண்டுக்கான கலை விழாவும் பிரியாவிடை நிகழ்வும் சனிக்கிழமை (5)மாலை 3.00மணியளவில் கந்தளாய் தி/பரமேஸ்வரா மகா வித்தியாலயத்தின் கலையரங்கில் நடைபெற்றJ. இதன்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
ஒரு மாணவரின் கல்வி,விளையாட்டு,கலைகள் மற்றும் பல திறன்களை வெட்க சுபாவம் இன்றி வளர்த்துக்கொள்ளக் கூடிய தளமாக பாலர் பாடசாலைகள் திகழ்கின்றன.இவற்றுக்கு பெற்றோர்களின் பங்களிப்பும் மிகவும் இன்றியமையாததாகும்.
கிழக்கு மாகாணத்தின் பாலர் பாடசாலையின் வளங்களையும் செயற்பாடுகளையும் மேம்படுத்த அதன் பணியகம் செயற்பட்டு வருகின்றது.அதேபோன்று, பாலர் பாடசாலையின் ஆசிரியர்களுக்கு மாதாந்தம் மூவாயிரம் ரூபாய் சம்பளத்தை வழங்குவதற்கும் கிழக்கு மாகாண முதலமைச்சர் தலைமையிலான குழு செயற்பட்டு வருகின்றது.
இந்த ஆசிரியர்களுக்கான சம்பளப் பிரச்சினை கடந்த கால ஆட்சியிலும் பேசப்பட்டதை தவிர வழங்கப்படவில்லை.இம்முறை குறுகிய காலத்தில் நிவர்த்தி செய்யப்படும் என்றார்.

1 hours ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago