Niroshini / 2015 நவம்பர் 29 , மு.ப. 10:17 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்,ஒலுமுதீன் கியாஸ்
பாலர் பாடசாலையானது இலங்கையின் மிக முக்கியமான நிறுவனமாகும்.அந்தவகையில்,ஒருவரின் பல்கலைக்கழக கல்விக்கும் பாலர் பாடசாலையின் ஆரம்பக் கல்வியே வித்திடுகின்றது.பாலர் பாடசாலையில் ஊட்டப்படுகின்ற கல்வி தான் ஒரு மனிதனின் வாழ்க்கைக்கு வித்திடுகின்றது என கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் சிரேஸ்ட சட்டத்தரணியுமான ஜே.எம்.லாஹிர் தெரிவித்தார்.
திருகோணமலை வின் பாலர் பாடசாலையின் 2015ஆம் ஆண்டுக்கான பரிசளிப்பு விழா இன்று ஞாயிற்றுக்கிழமை திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரியின் கலையரங்கில் பாடசாலையின் அதிபர் திருமதி மஹ்ரூப் தலைமையில் நடைபெற்றது.இதில் பிரதம அதிதியாக கலந்து உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
கிழக்கு மாகாணத்தில் பாலர் பாடசாலைக்கான தனியான பணியகம் இயங்கி வருகின்றது. அதற்கான நியதிச்சட்டம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.அதன் மூலம் இந்த பாலர் பாடசாலையின் செயற்பாடுகள் இயங்கி வருகின்றன.
ஒவ்வொரு பகுதிகளிலும் அமைக்கப்பட்டுள்ள பாலர் பாடசாலைக்கு பொதுமக்கள் இயன்ற ஒத்துழைப்புகளையும் ஒத்தாசைகளையும் வழங்க வேண்டும். கிழக்கு மாகாண சபை மூலம் பாலர் பாடசாலைக்கு புதிய திட்டங்களை மேற்கொள்ள ஆயத்தம் செய்து வருகின்றது.
இளம் பராயத்தில் இருந்தே ஆங்கிலத்தையும் சிங்களத்தையும் சின்னஞ் சிரார்களுக்கு புகட்டுவதன் மூலம் அவர்களின் உயர்கல்வியை தீர்மானிக்க கூடியதாக இருக்கும்.
மேலும்,சத்தியத்தை ஏற்று அசத்தியத்தை எதிர்த்து சின்னம் சிறுவர்களுக்கு சிறந்த கல்வியை புகட்ட வேண்டும் என்றார்.

55 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
1 hours ago
1 hours ago