Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Thipaan / 2016 ஜூன் 12 , மு.ப. 06:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடமலை ராஜ்குமார்
'பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, திருகோணமலைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட விடயம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுன்ற உறுப்பினர்களுக்குத் தெரியாது. இவ்விடயம் தொடர்பாக எந்த ஒரு தகவலும் எமக்குத் தரப்பட வில்லை' என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க. துரைரெட்ணசிங்கம் தெரிவித்தார்.
'இன்று இளைஞர்களின் வேலை வாய்ப்பு மற்றும் அபிவிருத்திகளிலும் இது போன்ற நிலைகள் தான் காணப்படுகின்றன. நல்லாட்சி ஆரம்பிக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்தும், எமது மக்களின் வாழ்வில் விருத்தி இல்லை' எனவும் தெரிவித்தார்.
டொக்டர் அ.ஸதீஸ்குமாரின் 'நிலக்கரி மின் ஆலையில் சம்பூர்?' என்ற நூல் வெளியீடு, திருகோணமலை உட்துறைமுக வீதியிலுள்ள ஜெசுவிட் அக்கடமி மண்டபத்தில், சனிக்கிழமை (11) மாலை 4 மணியளவில் இடம்பெற்றது.
அதில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
'நாட்டிலுள்ள அரசியல் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சி, முஸ்லிம் காங்கிரஸ், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என அனைத்துக் கட்சிகளும், தாம் சார்ந்த பிரிவுகளைச் சேர்ந்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புக்களை வழங்கி வருகின்ற போது, எமது கட்சிக்கு அவ்வாறான வாய்ப்பு இல்லை.
நல்லாட்சி அரசாங்கம் ஆரம்பமாகி ஓராண்டு நிறைவடைந்தும், எமது மக்களுடைய வாழ்வில் எவ்வித அபிவிருத்தியும் இல்லை. இது தொடர முடியாது, இவ்விடயம் தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் சம்பந்தன் ஐயா பேசியுள்ளார்.
இன்னும் சில தினங்களில் இவ்வாறான விடயங்கள் தொடர்பாகத் தீர்க்கமான முடிவு ஒன்றினைப் பெறுவதற்காகக, அரசாங்கத்துடனான உயர் மட்டப் பேச்சு வார்த்தைகள் இடம்பெறக்கூடிய சந்தர்ப்பங்கள் உள்ளன' எனத் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago
9 hours ago