2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

450 பேருக்கு நியமனக்கடிதங்கள்

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 18 , மு.ப. 08:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்  

எதிர்வரும் 20ஆம் திகதி நில அளவைத் திணைக்களத்தில் பயிற்சிகளை நிறைவுசெய்த 450 பேருக்கு தனது அமைச்சினூடாக வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கான நியமனக் கடிதங்களை  வழங்கவுள்ளதாக காணி அமைச்சர் எம்.கே.ஏ.டி.எஸ்.குணவர்தன தெரிவித்தார்.     

கந்தளாய், அக்போபுர பிரதேசத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (18) நடைபெற்ற மக்கள் சந்திப்பிலேயே, அவர் இதனைக் கூறினார்.

இங்கு மேலும் தெரிவித்த அவர், 'கடந்த காலத்தில் மக்கள் வாழ்க்கைச் சுமையுடன் கஷ்;டத்தை அனுபவித்துவந்தனர். ஆனால், தற்போது அவ்வாறான கஷ்டமின்றி மக்கள் நிம்மதியாக நல்லாட்சியில் வாழ்கின்றனர்.  இந்த நல்லாட்சியில்  மக்கள் சந்தோஷமாகவும் நிம்மதியாகவும் வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுப்போம்' என்றார்.

'மேலும், குறுகிய காலத்தில் திருகோணமலை மாவட்டத்தில் வேலை இல்லாப் பிரச்சினையை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கையை மேற்கொள்வோம். பட்டதாரிகளின் பிரச்சினை தீர்க்கப்படும்' என அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .