Suganthini Ratnam / 2015 டிசெம்பர் 27 , மு.ப. 05:57 - 0 - {{hitsCtrl.values.hits}}

-அப்துல்சலாம் யாசீம்
திருகோணமலை நகர சபைக்குச் சொந்தமான பெரிய கடை பொதுச்சந்தை சிறந்த முறையில் பராமரிக்கப்படாமையினால் அப்பொதுச்சந்தையில் குப்பைகள் நிறைந்து காணப்படுவதுடன், துர்நாற்றம் வீசுவதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
நகர சபையினால் நிர்மாணிக்கப்பட்ட இப்பொதுச்சந்தையில் தற்போது ஆட்டிறைச்சிக்கடை மற்றும் மாட்டிறைச்சிக் கடைகள் மாத்திரம் இயங்குகின்றன. ஏனைய கடைகள் மூடப்பட்டுக் காணப்படுகின்றன.
இச்சந்தையில் குப்பைகள் நிறைந்து துர்நாற்றம் வீசுகின்றமை தொடர்பில் நகர சபைக்கு தெரியப்படுத்தியும் எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, இக்குப்பைகளை அகற்றுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு அம்மக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
இது தொடர்பில் அப்பகுதிக்குப் பொறுப்பான பொதுச்சுகாதாரப் பரிசோதகர் எஸ்.உதயகுமாரிடம் கேட்டபோது, 'நகர சபைக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் நகர சபை சுகாதார ஊழியர்களின் உதவியுடன் குப்பைகளை மிக விரைவில் அகற்றப்படவுள்ளன' என்றார்.

24 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
3 hours ago