Suganthini Ratnam / 2016 ஜனவரி 28 , மு.ப. 05:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
பதினெட்டு புறாக்களை திருடிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட ஒருவரை எதிர்வரும் மாதம் 09ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதவான் ரி.சரவணராசா, புதன்கிழமை (27) உத்தரவிட்டார்.
திருகோணமலை, லிங்கநகர்ப் பிரதேசத்தில் 18 புறாக்களை 25 வயதுடைய இச்சந்தேக நபர் திருடியதாக பொலிஸில் புறா வளர்ப்பாளர்கள் முறைப்பாடு செய்தனர்;. இதனைத் தொடர்ந்து, விசாரணை மேற்கொண்டு சந்தேக நபரை புதன்கிழமை மாலை பொலிஸார் கைதுசெய்து நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.
இந்தச் சந்தேக நபரிடமிருந்து ஆறு புறாக்களை கைப்பற்றியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
7 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
7 hours ago
8 hours ago