Suganthini Ratnam / 2015 ஒக்டோபர் 11 , மு.ப. 04:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எப்.முபாரக்
அனைத்து மக்களும் பயனடையும் வகையில் உள்ளூராட்சிமன்றங்களின் செயற்பாடுகள் அமைய வேண்டுமென்பதுடன், இதன் மூலம் சகல பிரதேசங்களும் அபிவிருத்தியடையுமெனவும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் அருண சிறிசேன தெரிவித்தார்.
பேராறு பிரதேசத்தில் சனிக்கிழமை (10) மாலை நடைபெற்ற மக்கள் சந்திப்பிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு மேலும் தெரிவித்த அவர், 'எதிர்வரும் மார்ச் மாதம்; உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நடைபெறும் சாத்தியக்கூறுகள் தென்படுகின்றன.
உள்ளூராட்சிமன்றங்கள் மூலமாக எந்த அபிவிருத்திகளும் இடம்பெறுவதில்லையென மக்கள் தெரிவிக்கின்றனர். இதனை மாற்றி பிரதேசத்தின் வளர்ச்சியையும் அபிவிருத்தியையும் இலக்காகக் கொண்டு செயற்பட வேண்டும்' என்றார்.
மேலும், கந்தளாய்ப் பிரதேசத்திலுள்ள அனைத்து சிறு வீதிகளும் செப்பனிடப்பட்டு மக்களின் பாவனைக்கு விட வேண்டும். அதேபோன்று மாகாணசபையின் நிதியொதுக்கீடு மூலம் கல்வி, சுகாதாரம் ஆகியவற்றுக்கும் இங்குள்ள சிறு பாலங்களையும் புனரமைக்கவுள்ளேன்' எனத் தெரிவித்தார்.
8 hours ago
8 hours ago
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
8 hours ago
15 Dec 2025