Sudharshini / 2015 டிசெம்பர் 12 , பி.ப. 12:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
எப்.முபாரக்
திருகோணமலை நித்தியபுரி பகுதியிலுள்ள வீடொன்றில் கடந்த பெப்ரவரி மாதம் இரண்டு பவுன் தங்க நகை மற்றும் 35,000ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிவிட்டு தலைமறைவாகி இருந்த நபர் ஒருவரை, இம்மாதம் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் ரி.சரவணராசா வெள்ளிக்கிழமை (11)உத்தரவிட்டார்.
உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நித்தியபுரி பகுதியில் குறித்த நபர் பணம் மற்றும் தங்க நகைகளைத் திருடிவிட்டு ஒன்பது மாதகாலமாக தலைமறைவாக இருந்துள்ளார்.
இந்நிலையில், மேற்படி நபரை பொலிஸார் வியாழக்கிழமை (10)இரவு திருகோணமலை பகுதியில் வைத்து; கைதுசெய்து நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
10 minute ago
19 minute ago
29 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
19 minute ago
29 minute ago