2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

21 முதல் 24 வரை கிழக்கு பட்ஜெட்

Kanagaraj   / 2015 டிசெம்பர் 12 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

பைஷல் இஸ்மாயில்

கிழக்கு மாகாண சபையின் (2016) ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத்திட்டம் எதிர்வரும் 21 ஆம் திகதி தொடர்க்கம் 23 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.முஹம்மட் நஸீர், இன்று சனிக்கிழமை (12)தெரிவித்தார்.

அமைச்சர் மேலும் கூறுகையில்,

சுகாதார அமைச்சுக்கான வரவு- செலவுத்திட்டம் 23 ஆம் திகதி புதன்கிழமை முன்வைக்கப்படவுள்ளதாகவும், அன்றைய வரவு- செலவுத்திட்டத்தில் கிழக்கு மாகாணத்திலுள்ள 3 மாவட்டங்களில் காணப்படும் பின்தங்கிய பிரதேசத்தில் சுகாதார மற்றும் சுதேச வைத்தியத்துறையை முன்னெடுத்துச் செல்வது தொடர்பாகவும், இதன் மூலம் மூவின மக்களும் சிறந்ததொரு சுகாதார சேவையினை பெற்றுக்கொள்வதற்கான நிதி பங்கீடு தொடர்பான அறிக்கை ஒன்றையும் சமர்ப்பித்து உரையாற்றவுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், கடந்த காலங்களில் சுகாதார அமைச்சராக இருந்து நாடாளுமன்றம் சென்ற முன்னாள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் முன்னெடுத்து விட்டுச்சென்ற சுகாதாரத்துறை அபிவிருத்தி திட்டங்களை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லவுள்ளேன் என்றும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .