2026 மார்ச் 24, செவ்வாய்க்கிழமை

'முஸ்லிம்களுக்காக த.தே.கூ. பேசவேண்டும்'

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 21 , மு.ப. 06:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஐ.ஏ.ஸிறாஜ்

முஸ்லிம்களுக்காக பேச தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வரவேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எல்.தவம் தெரிவித்தார்.

கிழக்கு மாகாணசபை அமர்வு செவ்வாய்க்கிழமை (20) நடைபெற்றபோது, தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வது தொடர்பாக த.தே.கூட்டமைப்பினர் முன்வைத்த தனிநபர் பிரேரணை மீது உரையாற்றியபோதே, அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யவேண்டுமென உங்களுடன் சேர்ந்து முஸ்லிம் சமூகமும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் கோரிக்கை வைக்கின்றமைபோன்று, முஸ்லிம்களுக்கும் யுத்த காலத்தில் ஏற்பட்ட இழப்புகளை விசாரணை செய்து அவர்களுக்கும் நியாயம் பெற்றுக்கொடுக்க வேண்டும். அந்த வகையில், யுத்தக் குற்றம் தொடர்பில் விசாரிக்கும் கலப்பு நீதிமன்ற விசாரணைக் காலத்தை பின்னோக்கி நகர்த்தி, 1985ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முஸ்லிம்களுக்காக பேச முன்வரவேண்டும்' என்றார்.   

'இந்த நாட்டில் யுத்தம் ஓய்வுபெற்றுள்ளது. தற்போது இன நல்லிணக்கத்துக்கான தேவை உணரப்படுகிறது. இன நல்லிணக்கம் ஏற்படவேண்டுமாயின், யுத்த வடுக்கள் இல்லாமல்ச் செய்யப்பட வேண்டும். இந்த வடுக்களில் ஒன்றே தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விவகாரமுமாகும். எனவே, இது தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் ஈர்க்கப்பட வேண்டும்.
அவ்வாறே, முஸ்லிம்களின் ஆதங்கங்களையும் உள்வாங்கி அவர்களின் இழப்புகளுக்கு பொருத்தமான இழப்பீட்டு நிவாரணங்களை வழங்குவதனூடாக உண்மையான இன நல்லிணக்கத்தை கொண்டுவர முடியுமென்ற யதார்த்தத்தை எல்லோரும் ஏற்றுக்கொள்வர்' என அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .