Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2016 ஜூன் 19 , மு.ப. 06:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
பதுர்தீன் சியானா
'வலிகாமம் வடக்கிலுள்ள காணிப் பிரச்சினைகள் போல், புல்மோட்டையிலிருந்து பொத்துவில் வரையான முழுக் கிழக்கு மாகாணத்திலும் காணிப் பிரச்சினைகள் உள்ளன. இங்குள்ள எல்லா இராணுவ முகாம்களிலும் தேவைக்கு மேலதிகமாக, மக்களுடைய காணிகளில் வேலி அடைக்கப்பட்டு, உட்புகுதல் தடை என அறிவித்தல் பலகை போடப்பட்டுள்ளது' என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
புல்மோட்டையில் வெள்ளிக்கிழமை (17) இடம்பெற்ற இப்தார் நிகழ்வின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
நல்லாட்சியில் நாங்கள் முதலாவதாக விடுத்த கோரிக்கை, பாதுகாப்புப் பிரிவைச் சாராத சிவில் ஆளுநர் ஒருவர் தேவை என்பதுதான். நாங்கள் அதனைத் தற்போது கொண்டுவந்துள்ளேம். ஆனால், அந்த ஆளுநரினதும் சுபாவம் மாறியதா என்ற கேள்வி இருக்கத்தான் செய்கின்றது. அதனை நாம் பக்குவமாகக் கையாள வேண்டும். எங்கள் முலமைச்சர் ஓர் இடத்தில் பக்குவம் தவறிட்டார்.
பிரச்சினை மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகளின் ஆட்சியில், வேறு தலையீடுகள் இல்லாமல் உள்ளதா என்பதுதான் கேள்வி. இது வட மாகாணத்திலும் கிழக்கு மாகாணத்திலும் உள்ள ஒரு பெரிய பிரச்சினையாக உள்ளது.
நல்லாட்சியைக் கொண்டு வந்து விட்டோம், இருந்த பிசாசை விரட்டி விட்டோம். மீண்டும் அந்தப் பிசாசு வராமலும் பிரச்சினைகள் வராமலும் பார்த்துக்கொள்ளவேண்டும். அதற்கு நாங்கள் கொஞ்சம் பக்குவமாக இருக்கவேண்டும். ஆனால், கெடு பிடிமிக்க மேலாதிக்கவாதிகளின் பிடியிலிருந்து இந்த மண்ணிலே இருக்கின்ற பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வரவேண்டும். இது, இரவோடு இரவாக செய்யக் கூடியதொன்றல்ல.
நடந்த பிரச்சினைகள் இவ்வளவு பூதாகரமாகியதற்குக் காரணம் இனவாதமல்லாது வேறொன்றல்ல என்று எல்லாருக்கும் புரிந்திருக்க வேண்டும். நடுநிலைவாதிகளாகச் சிந்திக்கின்ற எந்த இனத்தவரைச் சார்ந்தவராக இருந்தாலும் விளங்கும்.
புல்மோட்டையிலுள்ள முப்பது ஏக்கர் காணிகள், பாதுகாப்புக்குத் தேவை என்று அடைக்கப்பட்டுள்ளன. அவ்வளவு விஸ்தீரணம் தேவையா என்ற கேள்வியும் உள்ளது. இன்னும் 10 ஏக்கர் காணி விசேட அதிரடிப்படையினருக்கும் எடுக்கபடவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது என அவர் தெரிவித்தார்.
19 minute ago
21 minute ago
21 minute ago
29 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
21 minute ago
21 minute ago
29 minute ago