Gavitha / 2015 டிசெம்பர் 18 , மு.ப. 05:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
அக்கரைப்பற்று கண்ணகிபுரம் பிரதேசத்தில், 10 வயது சிறுமியை துஷ்பிரயோகத்துக்குட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபரை, எதிர்வரும் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதிபதியும் மேலதிக மாவட்ட நீதிபதியுமான எச்.எம்.முஹம்மட் பஸீர், புதன்கிழமை (16) உத்தரவிட்டார்.
24 வயதுடைய இளைஞனே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த திங்கட்கிழமை (14), குறித்த சிறுமி வீட்டு முற்றத்தில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். இதன்போது, பக்கத்து வீட்டிலிருந்த இளைஞர் சிறுமியிடம் பணம் கொடுத்து, கடைக்குச் சென்று தனக்கு மீள்நிரப்பும் அட்டையை வாங்கி வருமாறு கூறியுள்ளார்.
மீள்நிரப்பும் அட்டையை கடையில் வாங்கிய சிறுமி, அதனை குறித்த இளைஞரிடம் கொடுப்பதற்கு சென்றபோதே, இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பின்னர், இது தொடர்பாக பெற்றொருக்கு சிறுமி தெரியப்படுத்தியதாகவும் இதனையடுத்து பெற்றோரால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டையடுத்து இளைஞன் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட சிறுமி, அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
24 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
3 hours ago