Niroshini / 2016 மே 05 , மு.ப. 06:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எப்.முபாரக்
இலங்கை மத்திய வங்கியின் புதிய செயற்திட்டங்கள் மூலம் இளைஞர், யுவதிகளின் வாழ்வாதாரங்களையும் சுயதொழுலுக்கான நிதியுதவிகளையும் வழங்கி வருகின்றன என இலங்கை மத்திய வங்கியின் குழுத் தலைவர் ஸ்ரீ பத்மநாதன் தெரிவித்தார்.
நிதியியல் நிபுணத்தும் சம்பந்தமான செயலமர்வு திருகோணமலை நகர சபையின் கேட்போர் கூடத்தில் நேற்று புதன்கிழமை இளைஞர் சேவைகள் மன்றத்தின் திருகோணமலை மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி ஆர்.ரவிக்குமார் தலைமையில் நடைபெற்ற போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
இப்போதைய கால கட்டத்தில் இளைஞர், யுவதிகளுக்கு வங்கிகளின் செயற்பாடுகள் அதன் மூலம் என்னன்ன நன்மைகளை பெற்றுக் கொள்ள முடியும் போன்ற விபரங்கள் தெரியாதவர்களாகவே இருக்கின்றார்கள். இலங்கையில் உள்ள அனைத்து வங்கிகளையும் நிர்வகிக்கின்ற பொறுப்பும் தன்மையும் இலங்கை மத்திய வங்கியே சாரும்.
இவ்வாறான நிதியியல் நிபுணத்துவம் தொடர்பான வேலைத்திட்டங்கள் மூலமாக இளைஞர், யுவதிகளுக்கு பணத்தை வழங்கி அவர்களை ஒரு சிறந்த தொழில் வல்லுனர்களாக மாற்றுவதற்கான வழிகளை மேற்கொண்டு வருகின்றோம். மத்திய வங்கியின் பணிகளும் சேவைகளும் அளப்பறியது அதன் சேவைகளை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
7 hours ago
7 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
9 hours ago