2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

திருகோணமலை மாவட்டத்திற்கு ஜப்பானிய அரசாங்கம் 80 மில்லியன் ரூபா நிதியுதவி

Super User   / 2013 பெப்ரவரி 20 , பி.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


ஜப்பானிய அரசாங்கம் திருகோணமலை மாவட்டத்தின் மீள்குடியேற்ற பகுதிகளில் வாழ்வாதார அபிவிருத்தி செயற்திட்டம் - 3 என்பதற்கு சுமார் 80 மில்லியன் ரூபா உதவி வழங்கியுள்ளது.

இந்த செயற்திட்டம் ஜப்பான் அரசார்பற்ற நிறுவன ஒத்துழைப்பு நன்கொடை திட்டத்தின் கீழ் பீஸ் வின்ட் ஜப்பான் நிறுவனத்தினால் செயற்படுத்தப்படவுள்ளது.

விவசாய, கால்நடை வளர்ப்பு பகுதிகளில் மீள்குடியேறிய சமூகங்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றுதல் என்ற நிகழ்ச்சி திட்டத்தின் மூன்றாம் கட்டமே இந்த செயற்திட்டமாகும்.

இந்த முழு திட்டத்தினால் திருகோணமலையில் வாழும் சுமார் 2,000 மேற்பட்ட குடும்பங்கள் நன்மையடையும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இந்த நன்கொடை தொடர்பான ஒப்பந்தம் கொழும்பிலுள்ள ஜப்பானிய தூதுவரின் வாசஸ்தளத்தில் இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் நுபிஹிட்டோ ஹோபோவும் பீஸ் வின்ட் ஜப்பான் நிறுவனத்தின் இலங்கை பிரதிநிதியும் கைச்சாத்திட்டனர்.

You May Also Like

  Comments - 0

  • aj Thursday, 21 February 2013 06:28 AM

    ஜப்பானில் இருந்து பணம், அமெரிக்காவில் இருந்து பணம், சீனா கொடுக்கம் பணம், இந்திய கொடுக்கும் பணம், IMF கொடுக்கும் பணம், உலகவங்கி கொடுக்கும் பணம், என்று எங்கு எல்லாம் பணம் எடுக்க முடியுமோ அங்கு எல்லாம் வடக்கு கிழக்கை காட்டி பணம் வாங்குகிறார்கள். ஆனால் தமிழர் வாழ்வு, தமிழர் பிரதேசம் எதுவித மாற்றமும் இல்லாமல் அப்படியே தான் இருக்கிறது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X