Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 03, வியாழக்கிழமை
Super User / 2011 மே 07 , பி.ப. 12:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ்.குமார்)
கிழக்கு மாகாணத்தில் கல்வி மற்றும் சுகாதார அமைச்சுகளில் தொண்டர் அடிப்படையில் நியமனம் பெற்ற 200 ஊழியர்களை நிரந்தரமாக்க கிழக்கு மாகாண அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக கிழக்கு மாகாண அமைச்சரவையின் ஊடக பேச்சாளர் எம்.எஸ் உதுமாலெப்பை தெரிவித்தார்.
அத்துடன் சுகாதார திணைக்களத்தில் வெற்றிடமாக உள்ள 636 சுகாதார தொழிலாளர்கள், 363 சாதாரண தொழிலாளர்கள் வெற்றிடங்களை நிரப்புவதற்கு மத்திய அரசாங்கத்தை கோருவதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
ஆரையம்பதி மகா வித்தியாலயத்தை ஆண்கள் வித்தியாலயமாகவும் ஆரையம்பதி இராமகிருஷ்ண சங்கம் தமிழ் கலவன் பாடசாலையை பெண்கள் பாசாலையை மாற்றவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.
கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சநதிரகாந்தன் தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற கிழக்கு மாகாண அமைச்சரவை கூட்டத்தின் போதே இத்தீர்மாணங்கள் எடுக்கப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
58 minute ago
02 Jul 2025