2025 மே 13, செவ்வாய்க்கிழமை

பாடசாலைகளை பிற்பகல் 1.30இற்கு நிறைவு செய்ய உத்தரவு

Kogilavani   / 2011 ஜூன் 03 , பி.ப. 01:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலை கல்வி வலயத்தை சேர்ந்த தமிழ் பாடசாலைகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் 1.30 பிற்பகல் மணிக்கு  நிறைவடையுமென வலயக் கல்வி பணிப்பாளர் கிறிஸ்டி முருகுப்பிள்ளை பாடசாலை அதிபர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

கடந்த  2 மாதங்களாக கிழக்கு மாகாண கல்வி  பணிப்பாளர் எம்.ரீ.ஏ. நிசாம் அனுப்பிய சுற்று நிருபத்தின் பிரகாரம் பிரதி திங்கட்கிழமைகளில் தமிழ் பாடசாலைகள் 2.10 மணிக்கே நிறைவடைந்திருந்தன.

கடந்த 31 ஆம் திகதி கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் என்.ரி.புஸ்பகுமாரவின் தலைமையில் நடைபெற்ற கிழக்கு மாகாண கல்வி அபிவிருத்தி கூட்டத்தின் போது மத்திய கல்வி அமைச்சின் சுற்று நிருபத்திற்கு புறம்பாக  பாடசாலை நேர அட்டவணைகளில் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது எனக் குறிப்பிட்ட செயலாளர் இனி வரும் காலங்களில் சகல  பாடசாலைகளும் மத்திய கல்வி அமைச்சின சுற்று நிருபத்திற்கு அமைவாகவே செயற்பட வேண்டும் எனத் தெரிவத்திருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X