2025 டிசெம்பர் 21, ஞாயிற்றுக்கிழமை

கழகத்தின் 2 துடுப்பாட்ட மட்டைகள் திருட்டு

Super User   / 2014 ஏப்ரல் 16 , மு.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-முஹம்மட் புஹாரி

தோப்பூர் ஸியா விளையாட்டுக் கழகத்தின் கடின பந்து துடுப்பு மட்டைகள் இரண்டு செவ்வாய்க்கிழமை (15) திருடப்பட்டுள்ளதாக அக்கழகத்தின் தலைவர் வாசில் வாசீத் தெரிவித்தார்.

திருடப்பட்ட கடின பந்து துடுப்பாட்ட மட்டைகள் இரண்டும் சுமார் 30,000 ரூபா பெறுமதியனவை என அவர் தெரிவித்தார்.

குறித்த விளையாட்டுக் கழகம் முன் பள்ளி பாடசலை ஒன்றினையும் இயக்கி வருகின்றது. இதனால் இவ் விளையாட்டுக் கழகத்தின் கடின பந்து உபகரணங்களை பாதுகாப்பதற்கு பிரத்தியேக அறையொன்றினை ஒதுக்கி அந்த அறைக்குள்ளேயே  வைக்கப்பட்டுவந்தன.

முன் பள்ளி பாடசலையை திறப்பதற்காக புதன்கிழமை (16) பாடசலை ஆசிரியைகள் வருகை தந்த போது விளையாட்டு உபகரணங்கள் வைத்திருக்கும் அறையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை அடுத்து கழகத்தின் தலைவருக்கு அறிவிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X