Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Kogilavani / 2011 ஏப்ரல் 27 , மு.ப. 08:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எப்.முபாரக்)
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிண்ணியா பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட மக்களுக்கு 'காசுக்கான வேலை உணவுக்கான வேலை' என்ற நிவாரணம் வழங்கும் திட்டத்தின் கீழ் 39,825 மனித வேலை நாளுக்குரிய உணவும் அதே மனித வேலை நாளுக்குரிய காசும் தற்போது வழங்கப்பட்டு வருகின்றன.
இதன் அடிப்படையில் ஒருவர் இரண்டு நாளைக்கு நிவாரண வேலைத் திட்டத்தில் ஈடுபடும் போது அவருக்கு 500 ரூபா காசும் 2.5 கிலோ கிராம் நிறையுடைய உணவும் வழங்கப்படுகின்றன.
பணக்கொடுப்பனவுகள் பிரதேச செயலகம் ஊடாக பயனாளிகளின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்படுகின்ற அதேவேளை உணவுகள் உலக உணவுத்திட்டத்தின் ஊடாக கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
இத் திட்டத்தின் கீழ் கிண்ணியாவில் உள்ள வீதிகள் வடிகான்கள் மற்றும் நீர்ப்பாசன கால்வாய்கள் பயனாளிகளால் சிரமதானம் மூலம் துப்பரவு செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
5 hours ago
7 hours ago