2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

திருமலையில் 5கிலோகிராம் கஞ்சாவுடன் ஒருவர் கைது

Kogilavani   / 2013 மார்ச் 18 , மு.ப. 09:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.குருநாதன்

திருகோணமலையில் நீண்டக காலமாக கஞ்சா போதைபொருள் விற்பனையில் ஈடுபட்டதாக வந்ததாககூறப்படும் நபர் ஒருவரை திருகோணமலை பொலிஸ் போதைபொருள் தடுப்பு பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.

இந்த நபர் மோட்டார் சைக்கிளில் 5 கிலோ கிராம் கஞ்சாவை எடுத்துக்கொண்டு செல்கையில் ஐந்தாம் கட்டை என்னுமிடத்தில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவுப் பொறுப்பதிகாரி சமிரா பிரதாப் தலைமையிலான குழுவினரால் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, மேற்படி நபரிடமிருந்து 5 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது. இதுதொடர்பில்; பொலிஸார் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேற்படி நபர் திருகோணமலை பொலிஸாரினால் நீண்டகாலமாக தேட்டப்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X