2025 மே 07, புதன்கிழமை

திருமலையில் வைத்தியரை கடத்தி கப்பம் பெற்ற 5 சந்தேகநபர்கள் கைது

Menaka Mookandi   / 2011 டிசெம்பர் 20 , பி.ப. 01:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

திருகோணமலை, வெள்ளை மணல் பகுதியைச் சேர்ந்த வைத்தியர் ஒருவரை கடத்தி கப்பம் பெற்ற ஐந்து சந்தேகநபர்களை குச்சவெளி பொலிஸார் இன்று ஹொரவவப்பொத்தானை பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர்.

கடந்த 2ஆம் திகதி நிலாவெளி பகுதியில் வைத்து மேற்படி சந்தேகநபர்களால் கடத்தப்பட்ட மேற்படி வைத்தியர், 10 இலட்சம் ரூபா பணம் கொடுக்கப்பட்டதை அடுத்து விடுவிக்கப்பட்டார்.

அச்சம்பவம் தொடர்பாக குச்சவெளி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில்,  பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குணத்திலகவின் உத்தரவுக்கமைய பொலிஸ் இன்ஸ்பெக்டர் எம்.தமீம், குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஐ.ஜீ.குணசேகர ஆகியோர் மேற்கொண்ட நடவடிக்கையை அடுத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து ஒற்றைக் குழல் துப்பாக்கியொன்று, முச்சக்கர வண்டி, மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியன மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குச்சவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X