2021 மே 18, செவ்வாய்க்கிழமை

திருமலை நகர சபைக்கு 50 மில்லியன் ரூபாய் வரிப்பணம் நிலுவையில்

Kogilavani   / 2011 ஜூன் 23 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலை நகர சபைக்கு 50 மில்லியன் ரூபாய் வரிப்பணம் நிலுவையாக உள்ளது. வரிப் பணத்தை செலுத்தாமல்  நிலுவையில் வைத்திருப்பவர்கள் இவ் பரிப்பணத்தை செலுத்துவதன் மூலமாக மேலதிக அபிவிருத்தியை  நகர சபை எல்லைக்குள் மேற்கொள்ள முடியும் என  நகர சபைத் தலைவர் க.செல்வராசா தெரிவித்தார்.

நகரசபையின் வருமாண பிறப்பாக்கம் தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் உவர்மலை இராஜவரோதயம் நூலகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றது.  இக்  கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஆசிய நிறுவனத்தின் அனுசரணையில் திருகோணமலை நகர சபையின்  பொருளாதார ஆளுகை நிகழ்ச்சித் திட்டத்தன் ஓர் அங்கமாக  இவ் விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது.

இக்கூட்டத்தில் நகர சபை உறுப்பினர்களுடன் உவர்மலை பிரதேச வரியிறுப்பாளர்களும் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .