2025 மே 14, புதன்கிழமை

14 பேருக்கு நியமனங்கள்

Suganthini Ratnam   / 2017 ஜூலை 04 , பி.ப. 01:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

சுகாதார ஊழியர்கள் 14 பேருக்கு நியமனங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சில் திங்கட்கிழமை (3) நடைபெற்றது.

கிழக்கு மாகாணத்தில் காணப்படும் சுகாதார ஊழியர்களுக்கான  வெற்றிடங்களை நிரப்பும் வகையில், மத்திய சுகாதார அமைச்சுக்கு மாகாண சுகாதார அமைச்சால்  சமர்ப்பிக்கப்பட்ட திட்டத்தை தொடர்ந்து, இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

பாடசாலை பற்சிகிச்சையாளர் 5 பேருக்கும், இயன் மருத்துவர் 4 பேருக்கும், கதிரியக்க இயக்குநர் ஒருவருக்கும், மருந்தாளர் 2 பேருக்கும், மருந்துக் கலவையாளர் 2 பேருக்கும் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மேற்படி தொழில்களுக்கு வெற்றிடங்கள் காணப்படும் வைத்தியசாலைகளுக்கு இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம்.நஸீர் தெரிவித்தார்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .