2025 ஜூலை 09, புதன்கிழமை

திருமலையில் சிறுவர் தின நிகழ்வு

Suganthini Ratnam   / 2010 ஒக்டோபர் 01 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

திருகோணமலை மாவட்டம்  குச்சவெளி அந்-நூறியா வித்தியாலத்தின் ஏற்பாட்டில் சிறுவர் தினம் இன்று வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.

சிறுவர் உரிமைகளை வலியுறுத்தியும், சிறுவர் பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாகவும் ஊர்வலம் ஒன்றும் நடத்தப்பட்டது. சிறுவர்கள் பதாதைகளைத் தாங்கியவாறு ஊர்வலத்தில்  பங்கு கொண்டனர்.

இதேபோன்று மற்றொரு சிறுவர் தின நிகழ்வு திருகோணமலை உவர்மலை விவேகாநந்தா கல்லூரி அதிபர் தலைமையில் நடைபெற்றது. சிறுவர்களின் கலை நிகழ்வுகளும் மேடையேற்றப்பட்டது. காலை கூட்டத்தினைத் தொடர்ந்து விவேகாநந்தா கலையரங்கில் இந்நிகழ்வு நடைபெற்றது. சிறுவர்களுக்கு  சிற்றுண்டி வழங்கி அதிபர் கௌரவித்தார்.


 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .