Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 10, வியாழக்கிழமை
Super User / 2010 ஒக்டோபர் 05 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ்.குமார்)
வரலாற்று பெருமை மிக்க கன்னியா வெந்நீர் கிணற்று பிரதேசத்தின் சுத்திகரிப்பு பணிகளை மறுஅறிவித்தல் வரை மேற்கொள்வதில்லை என திருகோணமலை, பட்டணமும் சூழலும் பிரதேச சபை தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம் இன்று புதன்கிழமை காலை அவசரமாக கூட்டப்பட்ட போதே இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக பிரதேச சபை தலைவர் ச.காந்தரூபன் தெரிவித்தார்.
பிரதேச சபையின் நிர்வாகத்தில் மாவட்ட அரச அதிபர் அத்துமீறி தலையிட்டதைக் கண்டித்தே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார். "திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் நேற்று செவ்வாய்க்கிழமை கன்னியாவுக்குச் சென்று, அங்கு பணிபுரியும் பிரதேச சபை ஊழியர்களது சேவைக்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளார்" என பிரதேச சபை தலைவர் காந்தரூபன் தெரிவித்தார்.
அத்துடன் அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த கன்னியா தொடர்பான விளம்பர பலகையையும் அகற்றிச் சென்றுள்ளார். கன்னியா செல்லும் எவரும் நுழைவுச் சீட்டு பெற்றுக் கொள்ளத் தேவையில்லை எனவும் மாவட்ட அரச அதிபர் கூறிச் சென்றுள்ளார் என காந்தரூபன் கூறினார்.
இவ்விடயம் தொடர்பாக பிரதேச சபை தலைவர் கிழக்கு மாகாண முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளார். அத்துடன் இது பற்றி ஜனாதிபதிக்கு அவசர கடிதமொன்றை அனுப்ப உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இது வியடமாக திருக்கோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் மேஜர் ஜெனரல் ரஞ்சித் சில்வாவை தொடர்பு கொண்டு கேட்ட போது,
கன்னியா வெந்நீர் ஊற்றுப் பகுதி திருகோணமலை பட்டணமும் சூழலும் பிரதேச சபைக்கு சொந்தமானது அல்ல. அது தொல்பொருள் திணைக்களத்திற்கு உரியது. பிரதேச சபையினர் உண்மைக்கு புறம்பான அறிவித்தல்களை அங்கு காட்சிக்கு வைத்துள்ளனர். இதனால் தான் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
11 minute ago
49 minute ago
56 minute ago