2025 மே 15, வியாழக்கிழமை

சம்பூர் பிரதேசத்தில் மறைத்து வைக்கப்பட்ட வெடிகுண்டுகள் மீட்பு

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 30 , மு.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(முறாசில்)

மூதூர் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட சம்பூர் பிரதேசத்தில் களப்புப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு தொகை வெடிகுண்டுகளை சம்பூர் பொலிஸார் நேற்று புதன்கிழமை மாலை கைப்பற்றியுள்ளனர்.

தகவலொன்றின் அடிப்படையில் குறித்த பகுதியில் தேடுதல் நடத்திய பொலிஸார், அப்பகுதியில் மறைத்து வைக்கப்பட்ட நிலையிலிருந்த மேற்படி வெடிகுண்டுகளை மீட்டனர்.

பீரங்கிக் குண்டு௧, ஆர்.பீ.ஜீ குண்டு௧, 60 மி.மீ. மோட்டார் குண்டு௧, மிதிவெடி௧, மிதிவெடி பியூஸ்௧, இனங்காணப்படாத மற்றுமோர் மோட்டார் குண்டு ஆகியவையே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .