Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2010 டிசெம்பர் 30 , பி.ப. 01:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ்.குமார்)
யுத்தம் மற்றும் அனர்த்தங்களால் விதவைகளான இளம் பெண்களின் மறுமணத்திற்கும் நல்வாழ்விற்கும் அரசு மற்றும் அரசசார்புடைய அமைப்புகள், கிராமமட்ட பெண்கள் அமைப்புகள் ஊக்கமளிப்பதற்கு முன்வர வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஜ.நா.வின் விதவைகள் தினத்தையொட்டி மூதூர் பெரியவெளி பொதுமண்டபத்தில கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பெண்கள் ஒன்றுகூடலிலேயே, இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
இதில் மூதூர், ஈச்சிலம்பற்று, தம்பலகாமம், குச்சவெளி, திருகோணமலை, பட்டணமும் சூழலும் ஆகிய பிரதேசங்களை சேர்ந்த மாதர் சங்க உறுப்பினர்கள், கணவனை இழந்த, காணாமல்போன, கடத்தப்பட்ட மற்றும் தடுப்பு முகாம்களிலுள்ளவர்களின்
மனைவிமார்களென 90 பேர் வரையில் கலந்துகொண்டனர்.
கணவனை இழந்த பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், பாதிக்கப்பட்ட பெண்களின் உணர்வு என்பன பற்றி வலையமைப்பு கள உத்தியோகத்தரான சு.நளினி, வலையமைப்பின் புதிய தலைவரான நிர்மலா ஆகியோரால் விளக்கமளிக்கப்பட்டது. மாவட்ட இணைப்பாளர் ந.அஞ்சலிதேவியினால் வலயமைப்பின் நோக்கம், இலக்கு, செயற்பாடுகள் பற்றி தெரிவிக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
07 Jul 2025
07 Jul 2025