2025 ஜூலை 17, வியாழக்கிழமை

திருகோணமலை தனியார் பஸ் ஊழியர்கள் பணிபகிஷ்கரிப்பில்

Super User   / 2011 ஜனவரி 08 , மு.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் சலாம் யாசிம்)

திருகோணமலை தனியார் பஸ் ஊழியர்கள் இன்று சனிக்கிழமை காலை முதல் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இன்று சனிக்கிழமை காலை திருகோணமலை பஸ் நிலையத்தில் வைத்து இலங்கை போக்குவரத்து சபை ஊழியரால் தனியார் பஸ் ஊழியர் தாக்கப்பட்டதை கண்டித்தும் தனியார் பஸ் ஊழியரை தாக்கிய இலங்கை போக்குவரத்து சபை ஊழியரை கைது செய்யக்கோரயும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

காயத்திற்குள்ளாக தனியார் பஸ் ஊழியர் திருகோணமலை பொது வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தனியார் பஸ் ஊழியரின் பணிபகிஷ்கரிப்பையடுத்து பஸ்கள் இன்றி பொதுமக்கள் சிரமப்படுகின்றனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை திருகோணமலை துறைமுக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X