2025 ஜூலை 07, திங்கட்கிழமை

திருகோணமலையில் தொண்டர் ஆசிரியர்களுக்கு விசேட கூட்டம்

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 26 , மு.ப. 10:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்சலாம் யாசிம்)

திருகோணமலை மாவட்ட தொண்டர் ஆசிரியர் சங்கம் நாளை வியாழக்கிழமை காலை 8 மணிக்கு விஷேட கூட்டமொன்றை  இந்து கலாசார மண்டபத்தில் நடத்தவுள்ளதாக தொண்டர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ந்ஐயமோகன் தெரிவித்துள்ளார்.
 
திருகோணமலை மாவட்டத்தில் நீண்டகாலமாக எதுவித கொடுப்பனவுகளும் தமக்கு வழங்கப்படாதபோதிலும்,  மாணவர்களின் நன்மை கருதி நிரந்தர ஆசிரியர்கள் போல் சேவை மனப்பாங்குடன் பணிபுரிகின்றோம். யுத்தம், சுனாமி, வெள்ளப்பெருக்கு போன்ற அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டும் எமது சேவையினை தொடர்ந்த வண்ணமுள்ளோமெனவும் அவர் கூறினார்.  

பல நேர்முகப் பரீட்சைகளுக்கு தோற்றி தகுதி இருந்தும் ஆசிரியர் நியமனம் இன்னும் வழங்கப்படவில்லை. பல போராட்டங்களை கிழக்கு மாகாணசபை, கிழக்கு மாகாண கல்வி அமைச்சுக்கு முன்பாக  நடத்தியும் உயர் அதிகாரிகளால் உறுதி மொழி வழங்கப்பட்டும் இதுவரை எதுவித  நடவடிக்கையும்  எடுக்கப்படவில்லையெனவும் தொண்டர் ஆசிரியர் சங்கத்தின் தலைவர் குறிப்பிட்டார்.
 
இது விடயமாக தொண்டர் ஆசிரியர்கள் ஒன்றுகூடி முடிவெடுக்கவுள்ளதாகவும் அனைத்து தொண்டர் ஆசிரியர்களையும் கலந்துகொள்ளுமாறும் தலைவர் ந்ஐயமோகன் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .