Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Suganthini Ratnam / 2011 மார்ச் 06 , மு.ப. 10:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல்சலாம் யாசிம்)
திருகோணமலை மொறவெவ பகுதியில் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்த மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மொறவெவ பொலிஸ் பொறுப்பதிகாரி தம்மிக விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
திருமலை அலஸ்தோட்டம் நிலாவெளி, கன்னியா 06ஆம் கட்டை, துவரங்காடு புதுக்குடியிருப்பு ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களே சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
வயல் காவலுக்காக வேண்டி தாங்கள் சொட்கன் துப்பாக்கி பயன்படுத்துவதாக கைது செய்யப்பட்டவர்கள் தெரிவித்தனர். எனினும், இவர்களிடம் துப்பாக்கி பயன்படுத்துவதற்கான அனுமதிப்பத்திரம் இல்லையென பொலிஸார் குறிப்பிட்டனர்.
துப்பாக்கி இவர்களுக்கு எவ்வாறு கிடைக்கப்பெற்றது என்பது தொடர்பில் விசாரணை இடம்பெறுவதுடன், கைதானவர்கள் நீதிமன்றத்தில் ஆஐர்படுத்தப்படவுள்ளதாகவும் மொறவெவ பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .