Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Super User / 2011 மார்ச் 06 , பி.ப. 02:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
(முறாசில்)
மூதூர் கரையோர கிராமங்களில் ஏற்பட்டுவரும் தீவிர கடலரிப்பை தடுப்பதற்கு அவசிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக கரையோர பாதுகாப்பு திணைக்கள உயர் அதிகாரிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை மூதூர் பிரதேசத்திற்கு விஜயம் செய்தனர்.
தீவிர கடலரிப்பிற்கு உள்ளாகிவரும் ஹபீப் நகர், தக்வா நகர் மற்றும் பஹ்ரியா நகர் முதலான பகுதிகளை குறித்த அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டனர்.
இப்பகுதி மீனவர் கூட்டுறவு சங்கங்களோடு மூதூர் கரையோர சமுதாய அபிவிருத்தி ஒன்றியமும் இணைந்து முக்கிய மூன்று அமைச்சர்களுக்கு கடலரிப்பை தடுக்க கோரி அவசர மகஜர் அனுப்பப்பட்டதை தொடர்ந்தே கரையோர பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகள் மூதூருக்கு சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .