Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Suganthini Ratnam / 2011 மார்ச் 07 , மு.ப. 05:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ்.குமார்)
கிண்ணியா பிரதேச செயலகத்திற்கு முன்பாக வேலையற்ற பட்டதாரிகள், தமக்கு உடனடியாக அரச நியமனம் வழங்க வேண்டுமெனக் கோரி மறியல் போராட்டமொன்றில்; ஈடுபட்டு வருகின்றனர்.
இன்று திங்கட்கிழமை காலை 8.35 மணிக்கு பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஒன்றுகூடிய வேலையற்ற பட்டதாரிகள், பிரதேச செயலக நுழைவாயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
'எந்தவிதமான அரசியல்த் தலையீடுகளுமின்றி தமக்கு நியமனம் வழங்க வேண்டும்,; நியமனங்கள் வழங்கப்படும்போது வயதெல்லை கவனத்திற்கொள்ளப்படக் கூடாது போன்ற கோரிக்கைகளை முன்வைத்து வேலையற்ற பட்டதாரிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த மறியல் போராட்டம் காரணமாக கிண்ணியா பிரதேச செயலகப் பணிகள் அனைத்தும் ஸ்தம்பிதமடைந்துள்ளன.
குறித்த இடத்திற்கு விரைந்த பொலிஸாரும்; கிழக்கு மாகாணசபைத் தலைவர் எச்.எம்.பாயிஸும் வேலையற்ற பட்டதாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.(படப்பிடிப்பு:-பரீட்)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .