Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 14, புதன்கிழமை
Super User / 2011 மார்ச் 09 , மு.ப. 10:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருகோணமலை பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் ஊழியர்கள் இன்று காலை 10.00 மணி தொடக்கம் 12.00 மணி வரை வைத்தியசாலைக்கு முன்னாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
நான்கு மாதங்களாக மேலதிக கொடுப்பனவு வழங்கப்படாமையை கண்டித்து குறித்த வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதியர்கள், கதிர்வீச்சு பகுதியினர் மற்றும் இயன் மருத்துவ பிரிவினர் என பலர் அடையாள வேலை நிறுத்தத்தில் பங்குபற்றினர்.
வைத்தியசாலை பணிப்பாளர் டாக்டர் ஈ.ஐp.ஞானகுணாளன் இரண்டு மாத மேலதிக கொடுப்பனவை இம்மாதம் வழங்குவதாக உறுதியளித்ததை தொடர்ந்தே அடையாள வேலை நிறுத்தம் இடைநிறுத்தப்பட்டது.
அவசர சிகிச்சை பிரிவு, அதிதீவிர சிகிச்சை பிரிவு, வாட்டுகளில் சிகிச்சை பெற்று வருகின்ற நோயாளர்களுக்கு பாதிப்புக்கள் ஏற்படாதவாறே அடையாள வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .