2025 மே 15, வியாழக்கிழமை

கிண்ணியா பிரதேச செயலக ஊழியர் நலன்புரிச் சங்க பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

Suganthini Ratnam   / 2011 மார்ச் 14 , மு.ப. 03:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

(அப்துல்சலாம் யாசீம்,எஸ்.எஸ்.குமார், எம்.பரீட்)

கிண்ணியா பிரதேச செயலக ஊழியர் நலன்புரிச் சங்கப் பணியாளர்கள் இன்று திங்கட்கிழமை காலை முதல் பணிப்பகிஷ்கரிப்பொன்றில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த வெள்ளிக்கிழமை எந்தவொரு உரிய ஆவணமும் இல்லாத நிலையில் தனக்கு மோட்டார் சைக்கிளுக்கான அனுமதிப்பத்திரம் வழங்குமாறு வந்த பொதுமகன் ஒருவருக்கு அனுமதிப்பத்திரம் வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டதையடுத்து, அங்கு பணியிலிருந்த ஊழியர்களை குறித்த பொதுமகன் அநாவசியமாக பேசியதுடன், அவர்களை அடிக்கவும் முற்பட்டதாக ஊழியர்கள் கூறுகின்றனர்.

இது தொடர்பில் கிண்ணியா பிரதேச செயலக ஊழியர் நலன்புரிச் சங்கப் பணியாளர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளபோதிலும், பொலிஸார் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததைக்  கண்டித்து இவர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .