2025 மே 14, புதன்கிழமை

ஊர்காவல் படை வீராங்கனையை தாக்கிய முச்சக்கர வாகன சாரதி கைது

Super User   / 2011 மார்ச் 21 , பி.ப. 01:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் சலாம் யாசிம்)

ஊர்காவல் படை வீராங்கனையொருவர் இன்று திங்கட்கிழமை 3.00 மணியளவில் தாக்கப்பட்ட நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முப்பத்தி ஏழு வயதான ஈ.டபிள்யூ. சுஜீவா என்ற ஊர்காவல் படை வீராங்கனை கடமைக்கு வந்துகொண்டிருந்த போது மது போதையில் இருந்த முச்சக்கர வாகன சாரதியினால் தாக்கப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கடமை சீருடையுடன் இரத்தம் வழிந்த நிலையிலேயே இவர் திருகோணமலை தலைமையக பொலிஸ் அதிகாரிகளால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

பெண் ஊர்காவல் படை வீராங்கனையை தாக்கிய முச்சக்கர வாகன சாரதி கைது செய்துள்ளதாகவும் நாளை செவ்வாய்க்கிழமை திருகோணமலை நீதிமன்றத்தில் ஆஐர்படுத்தவுள்ளதாகவும் திருகோணமலை தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .