2025 மே 14, புதன்கிழமை

மின் ஒளியூட்டும் வேலைத்திட்டம்

Kogilavani   / 2011 மார்ச் 22 , பி.ப. 01:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

கிழக்கின் உதயம் வேலைத்திட்டத்தின் கீழ் கிண்ணியா பிரதேசத்தில் பல கிராமங்களுக்கு மின் ஒளியூட்டும் வேலைத்திட்டங்களை திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் ஆரம்பித்து வைத்தார்.

இத்திட்டத்தின் கீழ் கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட  குறிஞ்சாக்கேணி சின்னக் கிண்ணியா, மதினாநகர்,  கச்சக் கொடித்தீவு,  மாஹாத் நகர்  ஆகிய கிராமங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினரின் பணிப்புரைக்கமைய சுமார் 1100 மீற்றர் தூரத்திற்கு இக்கிராமங்களுக்கு இலங்கை மின்சார சபையின அனுசனையுடன்  மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந் நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக்,  இணைப்புச் செயலாளர் எம்.எச்.எம்.சனூஸ், பிரதேச மின்சார பொறியியலாளர் அரபாத் அப்துல்லா உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .