2025 மே 14, புதன்கிழமை

வங்கியில் கொள்ளையிட முயன்றவர் கைது

A.P.Mathan   / 2011 ஏப்ரல் 13 , மு.ப. 10:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல்சலாம் யாசிம், எம்.பரீட்)

திருகோணமலை மொறவௌ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மகதிவுல்வௌ கிராமிய வங்கிக்குள் அத்துமீறி நுழைந்து அங்கு கடமையில் இருந்த யுவதியை தாக்கி பணத்தை மோசடிசெய்ய முற்பட்டார் என்ற குற்றச்சாட்டில் ஒருவரை கைது செய்துள்ளதாக மொறவௌ பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று முன்தினம், கணக்காளரான யுவதி பகல் உணவு உட்கொண்டிருந்தவேளையில் அங்கு புகுந்த சந்தேகநபர் தன் கழுத்தையும் பிடித்து அடித்துவிட்டு பணத்தையும் எடுத்துச்சென்றுள்ளார் எனவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை திருகோணமலை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். சந்தேகநபர் தன்னை தாக்கியதாக குறிந்த யுவதி நீதிமன்றில் கூறியவேளை, வைத்தியசாலையில் அனுமதித்து சிகிச்சை பெறுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

குறிந்த யுவதி தற்சமயம் திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதோடு சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X