2025 மே 14, புதன்கிழமை

திருகோணமலையில் உல்லாசக் கப்பல்

Suganthini Ratnam   / 2011 ஏப்ரல் 22 , மு.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எஸ்.குமார்)

உல்லாச பயணிகளை ஏற்றிக்கொண்டு செவன் சீஸ் வொஜாஜெர் (Sevan Seas Voyager) என்ற கப்பல் திருகோணமலை அஷ்ரப் இறங்குதுறையை இன்று  வெள்ளிக்கிழமை காலை வந்தடைந்தது.

 700 அறைகளைக் கொண்டமைந்துள்ள இக்கப்பலில்  1,400 உல்லாச பயணிகள் பயணம் செய்கின்றனர்.

திருகோணமலை அஷ்ரப் இறங்குதுறையிலிருந்து இன்று வெள்ளிக்கிழமை மாலை 6.00 மணிக்கு  இக்கப்பல் புறப்பட்டு காலித்துறைமுகத்தை நாளை சனிக்கிழமை காலை சென்றடையவுள்ளது. பின்னர் இக்கப்பல் அங்கிருந்து புறப்பட்டு நாளைமறுதினம் ஞாயிற்றுக்கிழமை கொழும்புத் துறைமுகத்தை சென்றடையவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X