2025 ஜூலை 05, சனிக்கிழமை

கிண்ணியா வைத்தியசாலையில் வைத்தியர் பற்றாக்குறை

Menaka Mookandi   / 2011 ஏப்ரல் 25 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் கீழ் இயங்கி வரும் கிண்;ணியா தள வைத்தியசாலையில் வைத்தியர்களுக்கு பாரிய தட்டுப்பாடு நிலவி வருகின்றன. 32 வைத்தியர்கள் தேவைப்படும் இவ்வைத்திய சாலையில் 8 வைத்தியர்கள் மட்டுமே தற்போது கடமையாற்றி வருகின்றனர்.

இதனால் இந்த வைத்தியர்களே வெளிநோயாளர் பிரிவு,சத்திரச்சிகிச்சைப்பிரிவு, அவசர சிகிச்சைப்பிரிவு, வார்ட் மற்றும் ஏனைய பகுதிகளையும் பல்வேறு சிரமங்களுக்;கும் மத்தியில் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் பொது மக்களும் சிறந்த சுகாதார சேவையினை பெற்றுக் கொள்ள முடியாது சிரமத்துக்கும் உள்ளாகின்றனர்.

இவ்வைத்தியசாலையில் கிண்ணியா பிரதேச மக்கள் மட்டுமின்றி முள்ளிப் பொத்தானை, தம்பலகாமம், வெள்ளைமணல் மற்றும் மூதூர் போன்ற பகுதிகளைச் சேர்ந்த மக்களும் பயன்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .