2025 மே 13, செவ்வாய்க்கிழமை

சிறுவர் பாதுகாப்புக்காக 'பேபி கிட்ஸ்' அன்பளிப்பு

Kogilavani   / 2011 மே 11 , பி.ப. 01:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.பரீட்)

கிண்ணியாவில்  மாஞ்சோலைச்சேனை, கண்டலடி ஊற்று, ஆயிலியடி ஆகிய கிரமாங்களுக்கு ஒரு வயதுக்குற்பட்ட பிள்ளைகளின் சுகாதாரத்தை பேணும் முகமாக 195 குடும்பங்களுக்கு இன்று பேபி கிட்ஸ் (Baby Kits) வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான நிதியுதவியினை சிறுவர் பாதுகாப்பு நிதியம் வழங்கியிருந்தது. அதேவேளை இப்பகுதியில் உள்ள சிறுவர் கழகங்களுக்கும், முன்பள்ளி சிறுவர்களுக்கும் முதலுதவிப் பெட்டிகளும், அதற்கான பொருட்களும் வழங்கப்பட்டுள்ளன.

இந்நிகழ்வில் பிரதேச கிராம உத்தியோகத்தர்கள், சுகாதார உதவி உத்தியோகத்தர்கள், சிறுவர் பாதுகாப்பு செயற்றிட்ட உத்தியோகத்தர் திருமதி காயத்திரி சுரீன் மற்றும் கிண்ணியாவின் திட்ட இணைப்பாளர் திருமதி முபாரக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


 


You May Also Like

  Comments - 0

  • mary Thursday, 12 May 2011 11:05 PM

    உங்கள் அன்பளிப்புக்கு நன்றிகள்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X