2025 ஜூலை 03, வியாழக்கிழமை

கிண்ணியா பிரதேச வீதிகள் கொங்ரீட் வீதிகளாக புனரமைப்பு

Super User   / 2011 மே 13 , பி.ப. 01:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.பரீட்)

மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ கிண்ணியா பிரதேசத்திலுள்ள பல வீதிகள் கொங்ரீட் வீதிகளாக இன்று வெள்ளிக்கிழமை புனரமைக்கப்பட்டன.

ஜெய்கா நிறுவனத்தின் நிதிவுதவியின் கீழ் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி திணைக்களத்தினால் சம்பிரதாய பூர்வமாக ஆரம்பிக்கபட்டது.

கிழக்கு மாகாண சபை தவிசாளர் எச்.எம்.எம்.பாயிஸ் மற்றும் கிழக்கு மாகாண சபை முதல்வரும் ஹஸன் மௌலவி ஆகியோரின் அழைப்பை ஏற்று பிரதம அதிதியாக கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெவ்வை கலந்துகொண்டார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண உறுப்பினர்கள், நகர சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பிரதேச செயலாளர்,வீதி அபிவிருத்தி அதிகார சபை  உத்தியோகத்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .