2025 மே 13, செவ்வாய்க்கிழமை

திருமலைக்கு பிள்ளைகளால் அழைத்து செல்லப்பட்டு கைவிடப்பட்ட தாய்மார்கள்

Super User   / 2011 மே 25 , பி.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் சலாம் யாசிம், அமதோரு அமரஜீவ)

திருகோணமலை பிரதேசத்துக்கு தமது பிள்ளைகளால் அழைத்து செல்லப்பட்டு  கைவிடப்பட்ட இரு தாய்மாரை மீட்டுள்ள திருமலை துறைமுக பொலிஸார் அவர்களை திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இவ்வாறு கைவிடப்பட்டவர்களில் ஒருவர் பத்தரமுல்லை பகுதியைச் சேர்ந்த 64 வயதான பெண்ணாவார். அவரின் மகன் திருகோணமலைக்கு அவரை அழைத்துவந்து பஸ் நிலையமொன்றுக்கு அருகில் கைவிட்டுச் சென்றுள்ளார் என பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

தனது மகன் ஒரு பொறியியலாளர் என தெரிவித்த அந்த தாய், தனது மகனின் முகவரி உள்ளிட்ட மேலதிக தகவல்களைக் கொடுக்க மறுத்து வருவதாக துறைமுக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இருப்பினும் தனது மகனுக்கு தான் சுமையாக இருக்க விரும்பவில்லை என்று தெரிவிக்கும் அவர், தன்னை ஒரு முதியோர் இல்லத்தில் விட்டுவிடும்படி கோரிக்கை விடுத்து வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, திருகோணமலை வைத்தியசாலைக்கு அருகாமையில் கைவிடப்பட்ட நிலையில் மற்றொரு தாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

கண்பார்வை குறைவான இவர், தனக்கு நான்கு மகன்மார் உள்ளதாகவும் அதில் ஒருவர் வெளிநாட்டில் தொழில் செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இவரும் தான் முதியோர் இல்லத்தில் வாழ விரும்புவதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். திருகோணமலை துறைமுக பொலிஸார்  மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X