Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2011 ஜூன் 20 , மு.ப. 05:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ்.குமார்)
எதிர்வரும் ஜூலை மாதம் 23ஆம் திகதி திருகோணமலை மாவட்டத்தின் குச்சவெளி, சேருவில, பட்டணமும் சூழலும் ஆகிய பிரதேசசபைகளுக்கு நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிடும் இலங்கைத் தமிழரசுக் கட்சி வேட்பாளர்களுடனான கலந்துரையாடலொன்று திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சம்பந்தனின் இல்லத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கட்சியின் திருகோணமலை மாவட்டக் கிளையின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான
க.துரைரட்னசிங்கம் தலைமையில் இந்தக் கலந்துரையாடல் நடைபெற்றது.
இங்கு இரா.சம்பந்தன் வேட்பாளர்கள் மத்தியில் உரையாற்றுகையில்,
நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தலிலும் வடக்கு, கிழக்கு மாகாண தமிழ் மக்கள் ஏகோபித்து வாக்களித்து முன்னரைப்போன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தெரிவு செய்வதன் மூலம் வடக்கு, கிழக்கு மாகாணங்களை உள்ளடக்கியதும் தமிழ் மக்களின் நியாயமானதும் நிரந்தரமானதுமான அரசியல் தீர்வைப் பெறுவதற்கான வழியை ஏற்படுத்த முடியும் என்றார்.
அரசாங்கத்துடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நடத்தி வருகின்ற பேச்சுவார்த்தை பற்றிய விபரங்களையும் இதன்போது இரா.சம்பந்தன் வெளியிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
53 minute ago
1 hours ago
6 hours ago