Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Suganthini Ratnam / 2011 ஜூலை 03 , மு.ப. 05:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ்.குமார்,அமதோரு அமரஜீவ)
திருகோணமலையில் வெவ்வேறு சம்பவங்களில் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட 5 சிறுமிகள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சேருவில பொலிஸ் பிரிவில் இரு சிறுமிகளும் கோமரன்கடவை பொலிஸ் பிரிவில் ஒரு சிறுமியும் குச்சவெளி பொலிஸ் பிரிவில் ஒரு சிறுமியும் திருகோணமலை பொலிஸ் பிரிவில் ஒரு சிறுமியும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட நிலையில் கடந்த வாரம் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சிறுமிகள் 12 வயதிற்கு கீழ்ப்பட்டவர்களெனத் தெரிவிக்கப்படுகிறது.
மேற்படி சம்பவங்களுடன் தொடர்புடையவர்களெனக் கருதப்படும் ஆசிரியர், சாரதி உள்ளடங்கலாக ஐந்து பேர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, மூதூரில் சிறுவனொருவன் கிறிஸ்தவ மதகுரு ஒருவரால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட நிலையில், அச்சிறுவன் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளான்.
இந்த பாலியன் துஷ்பிரயோக சம்பவத்துடன் தொடர்புடையதாக கருதப்படும் குறித்த மதகுருவை; தேடி பொலிஸார் வலை வீசியுள்ளனர்.
mattran Sunday, 03 July 2011 05:56 PM
தண்டனைகள் கடினப்படுத்தப்பட்டால் இவ்வாறான ஈன செயல்கள் இல்லாது ஒழியும்....
Reply : 0 0
IBNU ABOO Monday, 04 July 2011 12:25 AM
இஸ்லாமிய சரியா சட்டம் அமுல் படுத்தப்பட்டால் மாத்திரமே இந்த பாலியல் குற்றங்களை தடுக்கலாம். அல்லாவுக்கு தெரியும் எந்த குற்றத்திற்கு எந்த தண்டணை என்று. அதனால் தான் இஸ்லாமிய சரியா சட்ட நடைமுறை நாடுகளில் குற்றச்செயல்கள் மிகக்குறைவு.
Reply : 0 0
anban Monday, 04 July 2011 11:01 AM
இந்த குற்றவாளிகளுக்கு தீர்ப்பு சொல்பவர் அவருடைய குழந்தைக்கு ஒருவன் இப்படி செய்திருந்தால் அவர் என்ன செய்வாரோ அதை அவர் இவர்களுக்கு தீர்ப்பாக சொன்னால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிம்மதி கிடைக்கும். இப்படிப்பட்டசமூக விரோதிகள் பயப்படுவார்கள்(.முஸ்லிம்களின் வேதம் சொல்லும் தீர்ப்பு மிக மிக மிக சரியாக எனக்கு விளங்குகிறது.)உன் குழந்தைக்கு உன் சகோதரிக்கு உன் மனைவிக்கு இப்படி ஒருவன் செய்தால் நீ என்ன செய்வாயோ அதைத்தான் இவர்களுக்கு தண்டனையாக கொடுக்க வேண்டும்.
Reply : 0 0
Ravichandran maldives Monday, 04 July 2011 11:44 PM
இப்படியான ஈனச்செயலை செய்பவர்களின் உறுப்பை துண்டிப்பதால் சின்னஞ் சிறார்கள் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்பது எனது கருத்தாகும். இது போல் இன்னும் எந்தெந்த தவறுகள் செய்கிறார்களோ அததற்கு தகுந்த தண்டனைகளை கொடுக்கப்பட்டால் நம் தேசத்தைப் போல சிறந்த தேசம் உலகில் எங்கும் இல்லை.
Reply : 0 0
people of god Tuesday, 05 July 2011 02:32 AM
இவர்களை போன்ற மதகுரு மார்களால் சமூகத்துக்கு பெரிய களங்கம்.
Reply : 0 0
xlntgson Tuesday, 05 July 2011 09:29 PM
செக்ஸ் குற்றங்கள் அதிகரித்து வருவதற்கான காரணிகளையும் அறிய வேண்டும்!
இவற்றை பரபரப்பான செய்திகளாக வெளியிடும் முன்- விசாரித்து தீர்ப்பு வழங்கப்பட்டு தண்டனையும் வழங்கப்பட்டிருக்க வேண்டும்! விசேட நீதி மன்றங்களைக் கூட அமைக்கலாம். உறுப்பு நீக்கம் அல்ல- இவர்களை செயல் இழக்கச் செய்யும் காயடிக்கும் முறைகள் இப்போது சுலபம்!
நீதி வழங்குவோர் துணிச்சல் உடையோராகவும் இருத்தல் வேண்டும், சட்டத்திலும் இடம் இருக்க வேண்டுமே!
ஷரிஆ என்றாலே கொதித்துப் போகின்றவர்கள் இருக்கும் நிலையில், anban அதை எல்லா நிலைகளிலும் ஏற்பாரா?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
2 hours ago
3 hours ago
3 hours ago