2025 ஜூலை 02, புதன்கிழமை

தம்பலகாமம் பிரதேச செயலாளருக்கு மரண அச்சுறுத்தல்; பொலிஸில் முறைப்பாடு

Menaka Mookandi   / 2011 ஜூலை 29 , மு.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அமதோரு அமரஜீவ)

தம்பலகாமம் பிரதேச செயலாளர் லக்ஷ்மேந்திர தமயந்த் குமார தென்னகோனுக்கு இனந்தெரியாத நபர்களினால் தொலைபேசி மூலம் மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக தம்பலகாமம் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிரதேசத்தில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ள சிலர், சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக குறித்த பிரதேச செயலாளரிடம் அனுமதி பத்திரங்களைக் கோரியிருந்த நிலையில் அவற்றைக் கொடுக்க அவர் மறுப்பு தெரிவித்ததாலேயே இந்த மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் தனக்கு தேவையான பாதுகாப்பை வழங்குவதுடன் அச்சுறுத்தல் விடுத்த நபர்களை கண்டுபிடித்து கைது செய்யுமாறும் மேற்படி பிரதேச செயலாளரால் தம்பலகாமம் பொலிஸிடம் கையளிக்கப்பட்ட எழுத்துமூலமான முறைப்பாட்டுக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .