Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை
Suganthini Ratnam / 2011 ஓகஸ்ட் 10 , மு.ப. 03:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
(சி.குருநாதன்)
பாலியல் சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலோசனை வழங்கும் நோக்கில் திருகோணமலை பொதுவைத்தியசாலையில் அதற்கான பிரிவொன்று நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
திருகோணமலை பொதுவைத்தியசாலையில் யுனிசெப் அமைப்பின் நிதியுதவியுடன் பாலியல் அடிப்டையிலான வன்செயல்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலோசனை வழங்கும் நோக்கில் இந்த நிலையம் திறந்துவைக்கப்பட்டது.
திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் ரஞ்சித் சில்வா மங்கள விளக்கேற்றி இந்த நிலையத்தை திறந்து வைத்தார்.
திருகோணமலை பொதுவைத்தியசாலையின் பணிப்பாளரும் வைத்திய அத்தியட்சகருமான
டாக்டர் இ.ஜி.ஞானகுணாளன் இங்கு உரையாற்றுகையில்,
திருகோணமலை பொதுவைத்தியசாலையில் மாதாந்தம் குறைந்தது 40 பேர் தற்கொலைக்கு முயற்சித்தவர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். அத்துடன், பாலியல் வல்லுறவுக்குள்ளாகும் சிறுமிகளின் எண்ணிக்கையும் திருகோணமலை மாவட்டத்தில் அதிகரித்து வருகின்றன. இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டிய நிலையேற்பட்டுள்ளது என்றார்.
திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்கடர் பி.கே.ஞானகுணாளன், மாகாண சமூக சேவைகள் திணைக்களப் பணிப்பாளர் என்.மணிவண்ணன் மற்றும் அதிகாரிகள் இந்த நிகழ்வில் பங்குபற்றினர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
8 hours ago
8 hours ago